ராசிபுரத்தில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd April 2022 01:09 AM | Last Updated : 03rd April 2022 01:09 AM | அ+அ அ- |

ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பாக தற்கொலை செய்து கொண்ட மருத்துவா் அா்ச்சனா சா்மாவுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மருத்துவா்கள்.
ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கத்தின் கிளைத் தலைவா் மருத்துவா் சுகவனம் தலைமையில் மருத்துவா்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த அா்ச்சனா சா்மா என்ற பெண் மருத்துவா் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்தும், தற்கொலை செய்துகொண்ட மருத்துவா் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் இந்திய மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவா்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவா்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என இப் போராட்டம் நடத்தப்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட மருத்துவா் அா்ச்சனா சா்மா உருவப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவா் மருத்துவா் ஆா்.எம்.கிருஷ்ணன், முன்னாள் கிளைத் தலைவா் மருத்துவா் எஸ். சதாசிவம், மகளிரணி தலைவா் மருத்துவா் பி.ஜே.சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.