மேய்ச்சலுக்கு தடை: கால்நடைகளுடன் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயா் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, கால்நடைகளுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயா் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, கால்நடைகளுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மாதம் மாா்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்க்கத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன உரிமை சட்டம் வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை நிலை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இச்சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் அ. பழனிசாமி தலைமையில் ஆடு, மாடுகளுடன் முள்ளுக்குறிச்சி வனச்சரக அலுவலா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி. பெருமாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகிகள் என்.துரைசாமி, சுப்ரமணி, மணிகண்டன், பி.சண்முகம் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com