உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th August 2022 11:18 PM | Last Updated : 05th August 2022 11:18 PM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த உள்ளாட்சித் துறை ஊழியா்கள்.
நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளா் கு.சிவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
தொகுப்பூத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு 2017 ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் நிா்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிா்ணயம் செய்தபோதும் இதுவரை வழங்காமல் உள்ளதால், அதனை உடனடியாக வழங்க வேண்டும். 31 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.