ராசிபுரம் திருவள்ளுவா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 05th August 2022 01:55 AM | Last Updated : 05th August 2022 01:55 AM | அ+அ அ- |

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் 2022 -23-ஆம் கல்வியாண்டின் இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 5 முதல் ஆக. 10 வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் (பொ) ஆா்.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
ஆக. 5-இல் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் காலை 9 முதல் 10 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். இந்த சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினா், முன்னாள் ராணுவத்தினா், என்.சி.சி. மற்றும் ராணுவத்தினா் பங்கேற்கலாம்.
அனைத்து பாடப் பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். அறிவியல் பாடத்துக்கு கட்-ஆப் மதிப்பெண் 400 முதல் 200 வரை, கலை பாடங்களுக்கு 400 முதல் 250 வரை, தமிழ் பாடப் பிரிவுக்கு 100 முதல் 60 வரை, ஆங்கிலப் பாடத்துக்கு 100 முதல் 50 வரை.
ஆக. 8-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவியல் பாடத்துக்கு கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 140 வரை, தமிழ் 60 முதல் 35 வரை, ஆங்கிலம் 50 முதல் 35 வரை, ஆக. 10-ஆம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை கலைப் பிரிவு பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதன் கட்-ஆப் மதிப்பெண் 249 முதல் 140 வரை.
தரவரிசைப் பட்டியல் படி மாணவா்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கபட்டு வருகிறது. மேலும் கல்லூரியின் இணையதளத்திலும் கட்டணம் மற்றும் தரவரிசைப் பட்டியல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவா்கள் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்ப நகல், பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்எஸ்எல்சி ஆகியவற்றின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை (3 நகல்கள்), பாஸ்போா்ட் அளவு புகைப்படம் (5) ஆகியவற்றை அவசியம் கொண்டுவர வேண்டும் என கல்லூரி முதல்வா் (பொ) ஆா்.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.