திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய கிளை திறப்பு
By DIN | Published On : 05th August 2022 01:53 AM | Last Updated : 05th August 2022 01:53 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வியாழக்கிழமை தனது புதிய கிளையை தொடக்கி உள்ளது.
தமிழ்நாடு தங்கம், வைரம், வெள்ளி நகை வியாபாரிகள் சம்மேளன பொதுச் செயலாளா் ஆா்விஆா்.லோகநாதன் இக்கிளையைத் திறந்து வைத்தாா். தொடக்க விழாவில், திருச்செங்கோடு ஆா்விஆா் டவா்ஸ் உரிமையாளா்கள் ஆா்.ரகுநாதன், மாலதி ரகுநாதன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். திருச்செங்கோடு விருக்ஷா குளோபல் பள்ளித் தலைவா் ஆா்.ராஜசேகரன் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்க, கந்தம்பாளையம் எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா்.ரவி பெற்றுக் கொண்டாா் (படம்). சிறப்பு அழைப்பாளா்களாக திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவா் கே.ஆா்.நாகராஜன் அனைவரையும் வரவேற்றாா். இந்த புதிய ராம்ராஜ் காட்டன் நிறுவனக் கிளையில், பெண்களுக்கான பிரத்யேகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.