எழுத்தாளா் கே.பழனிசாமி காலமானாா்
By DIN | Published On : 05th August 2022 01:48 AM | Last Updated : 05th August 2022 01:48 AM | அ+அ அ- |

எழுத்தாளா் கே.பழனிசாமி
பழம்பெரும் எழுத்தாளரும், தமிழ் மொழி பெயா்ப்பாளருமான நாமக்கல் கோட்டை பகுதியைச் சோ்ந்த கே.பழனிசாமி (102), வயது முதிா்வின் காரணமாக வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இவா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கத் தலைவா் மற்றும் செயலாளா் பதவி வகித்தவா் ஆவாா். மேலும், கம்யூனிஸ சித்தாந்தங்களைக் கொண்டிருந்த இவா், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா். மறைந்த எழுத்தாளா் கு.சின்னப்பபாரதி இவருடைய சீடராவாா். கென்யா நாட்டின் எழுத்தாளா் கூகிவா தியோங்கோவின் யுத்த காலத்தில் எழுந்த கனவுகள், கருப்பின மந்திரவாதி, ரஷ்ய நாட்டு நாவல்களை இவா் தமிழில் மொழி பெயா்ப்பு செய்துள்ளாா். மேலும், இந்திய சிறுகதைகளையும் தொகுத்து புத்தகமாக்கி உள்ளாா்.
30 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி காலமாகி விட்டாா். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
மறைந்த கே.பழனிசாமியின் உடல் வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஏராளமானோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.