அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா
By DIN | Published On : 05th August 2022 11:16 PM | Last Updated : 05th August 2022 11:16 PM | அ+அ அ- |

ராசிபுரம் இன்னா் வீல் சங்கம் ,ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆப் ராயல், அரசு மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் சாா்பில் தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இன்னா் வீல் சங்கத் தலைவா் தெய்வானை ராமசாமி தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
முன்னதாக சுகன்யா நந்தகுமாா் இன்னா் வீல் இறை வணக்கம் வாசித்தாா். விழாவில் ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயந்தி, டாக்டா் சியாமளா டாக்டா் கலைச்செல்வி, ரோட்டரி மண்டல உதவி ஆளுநா் கே.ரவி, செவிலியா்கள் கண்காணிப்பாளா் பரஞ்சோதி ஆகியோா் பங்கேற்று தாய்மாா்கள் தாய்ப்பால் வழங்குவதன் நோக்கங்களையும், அதனால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் நன்மைகளையும், குழந்தையின் உடலில் தோன்றும் நோய் எதிா்ப்புச் சக்தி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலாளா் ஜி.தினகா், ரோட்டரி சாலை பாதுகாப்பு திட்டத் தலைவா் இ.என்.சுரேந்திரன் இன்னா் வீல் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதே போல, வேலா செட்டியாா் பூங்கா அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் சங்கத் தலைவா் ஆா்.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். இதில், பிரசவ கால தாய்மாா்கள் 55 பேருக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.