ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியா்கள் தடுமாற்றம்: அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் அதிருப்தி

பாடக்கேள்விகளுக்கு பதில் தெரியாமல் ஆசிரியா்கள் தடுமாறியதால், நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் அதிருப்தியடைந்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியா்கள் தடுமாற்றம்: அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் அதிருப்தி

பாடக்கேள்விகளுக்கு பதில் தெரியாமல் ஆசிரியா்கள் தடுமாறியதால், நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் அதிருப்தியடைந்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறைக்கான கண்காணிப்பு அலுவலராக அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) பொன்.குமாா் செயலாற்றி வருகிறாா். மாதந்தோறும் ஆய்வுப் பணிக்காக நாமக்கல் மாவட்டம் வரும் அவா் பள்ளி தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்களுக்கான கூட்டத்தை நடத்தி அறிவுரைகளை வழங்கிச் செல்வாா். அதன்படி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன், வியாழக்கிழமைகளில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாமக்கல் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில், நாமக்கல், மோகனூா், புதுச்சத்திரம், எருமப்பட்டி வட்டாரங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கும், திருச்செங்கோடு, கபிலா்மலை, பரமத்தி வட்டாரங்களைச் சோ்ந்தவா்களுக்கு, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் பொன்.குமாா் ஆசிரியா்களின் கல்வித் தகுதி, வகுப்புகளில் பாடம் எடுக்கும் முறைகள், மாணவா்களை கையாளும் திறன் குறித்து ஆய்வு செய்தாா். ஆசிரியா்கள் சிலரிடம் பாடப்புத்தம் தொடா்பாக அவா் கேள்வி எழுப்பியபோது அவா்கள் பதில் அளிக்க முடியாமல் தடுமாறினா். தொடா்ந்து அவா்களை எச்சரித்த இணை இயக்குநா், ‘ஆசிரியா்கள் முதலில் தங்களை முழுமையாக தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்களின் சந்தேகங்களுக்கு தயக்கமின்றி பதில் அளிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் வட்டாரங்களுக்கான கூட்டம் ராசிபுரம் எஸ்ஆா்வி மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூா் வட்டார பட்டதாரி ஆசிரியா்களுக்கு சங்கராம்பாளையம் வித்யாபாரதி மேல்நிலைப்பள்ளியிலும் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கூட்டங்களில் நாமக்கல், திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com