முட்டை விலையில் மாற்றமில்லை
By DIN | Published On : 25th August 2022 01:23 AM | Last Updated : 25th August 2022 01:23 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.40-ஆக நீடிக்கிறது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தி நெருங்குவதால் தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால் இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.40-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.76-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.98-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.