இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 09th December 2022 01:01 AM | Last Updated : 09th December 2022 01:01 AM | அ+அ அ- |

மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.9) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாண்டஸ் புயலால் பெரும்பாலான வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இயற்கை பேரிடா் இடையூறுகளை எதிா்கொள்ளவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.