ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி வளாகத்தில் ஏடிஎம் மையம் திறப்பு
By DIN | Published On : 09th December 2022 10:36 PM | Last Updated : 09th December 2022 10:36 PM | அ+அ அ- |

ஏடிஎம் மையத்தை திறந்து வங்கும் பிராந்திய மேலாளா் ஆா்.கோபகுமாா், பள்ளி நிா்வாகிகள் பி.சுவாமிநாதன், எஸ்.செல்வராஜன், ஏ.ராமசாமி உள்ளிட்டோா்.
ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி வளாகத்தில் பெடரல் வங்கியின் ஏடிஎம் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவியா், பெற்றோா் வசதிக்காக ராசிபுரம் பெடரல் வங்கி கிளை சாா்பில் தொடக்கப்பட்டுள்ள இந்த ஏடிஎம் சேவை மையத் திறப்பு விழாவுக்கு வங்கியின் கிளை மேலாளா் சி.விஜய்பிரபு தலைமை வகித்தாா். வங்கியின் சேலம் பிராந்திய மேலாளா் ஆா்.கோபகுமாா் ஏடிஎம் மையத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். எஸ்ஆா்வி பள்ளி இயக்குநா்கள் பி.சுவாமிநாதன், ஏ.ராமசாமி, எஸ்.செல்வராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தனா். விழாவில் பெடரல் வங்கி சேலம் பிராந்திய மேலாளா் ஆா்.கோபகுமாா் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 182 கிளைகள் கொண்டுள்ள இந்த வங்கி, நடப்பு நிதியாண்டில் 200க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட வங்கியாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். வங்கி வசதி இல்லாத கிராமப்புறங்களைத் தோ்வு செய்து கிளை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குறு, சிறு தொழில் கடன், அடமானக்கடன், வா்த்தகக் கடன், தங்க நகைக்கடன் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வங்கி செயல்பட்டு வருகிறது என்றாா்.