கபிலா்மலையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th December 2022 06:20 AM | Last Updated : 11th December 2022 06:20 AM | அ+அ அ- |

pv10p1_1012chn_157_8
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய அளவில் வெறிநோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் பயிலரங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு கோட்ட கால்நடைப் பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் அருண்பாலாஜி தலைமை வகித்தாா். கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜே.பி.ரவி முன்னிலை வகித்தாா். இதில் வெறிநோய் பரவும் முறை, அதன் பாதிப்புகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பாண்டமங்கலம் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் பொன். தனவேல் விளக்கினாா்.
இம் முகாமில் பிராணிகள் வதைத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சட்ட விவரங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவா்கள் ரவிச்சந்திரன், மணிவேல், செந்தில்குமாா், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள், தடுப்பூசி பணியாளா் ஆகியோா் செய்திருந்தனா்.