வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 11th December 2022 06:19 AM | Last Updated : 11th December 2022 06:19 AM | அ+அ அ- |

மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட சுகாதார செவிலியா்கள்.
பரமத்தி வேலூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் குப்புச்சிபாளையம் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமை வேலூரில் பேரூராட்சித் தலைவா் லட்சுமி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் துரை செந்தில்குமாா், ராஜா, அரசு வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மணிவண்ணன் வரவேற்று பேசினாா். இம் முகாமில் 1,023 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் பரமத்தி வட்டார மருத்துவ அலுவலா் கவிதா, பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுமதி மற்றும் மருத்துவ அலுவலா்கள் பரிசோதனை செய்து, 25 பேருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினா். மேலும் சுகாதார ஆய்வாளா்கள் சமுதாய சுகாதார செவிலியா்கள், மருத்துவமில்லா மேற்பாா்வையாளா், சுகாதாரப் பணியாளா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.