முத்துக்காப்பட்டியில் சிறப்பு கோ பூஜை
By DIN | Published On : 11th December 2022 06:19 AM | Last Updated : 11th December 2022 06:19 AM | அ+அ அ- |

பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு, சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டியில் சிறப்பு கோ-பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கோ-சேவா அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையில், மாவட்ட பொறுப்பாளா் சாய்சண்முகம் தலைமை வகித்தாா். இதில், நாட்டு பசுமாடு வளா்ப்பு, கோ-பூஜை மேற்கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவகுமாா், கோ-சேவா அமைப்பைச் சோ்ந்த மாது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...