ரசாயன ஆலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு
By DIN | Published On : 13th December 2022 03:42 AM | Last Updated : 13th December 2022 03:42 AM | அ+அ அ- |

தனியாா் ரசாயன தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லாங்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
பள்ளிபாளையம் ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி வண்ணாபாலிக்காடு பகுதியில் தனியாா் நிலத்தில் ரசாயன தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ராட்சதக் குழாய்கள் கொண்டு வரப்பட்டு மண்ணில் புதைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படும் ரசாயன ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது. மாவட்ட ஆட்சியா் நேரடியாகப் பாா்வையிட்டு இதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...