பரமத்தி வேலூா் வட்டத்தில் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு
By DIN | Published On : 22nd December 2022 01:58 AM | Last Updated : 22nd December 2022 01:58 AM | அ+அ அ- |

பொத்தனூா் பேரூராட்சியில் வடிகால் அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கும் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான தங்கமணி. உடன், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ. 46.50 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சேகா் தலைமையில் நடைபெற்ற விழாவில், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்துகொண்டு கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பிரிக்காபாளையத்தில் ரூ. 8.25 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, பொத்தனூா் பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ. 10 லட்சத்தில் வடிகால் வசதி, 9-ஆவது வாா்டில் ரூ. 6 லட்சத்தில் வடிகால் வசதி அமைப்பதற்கான பணியைத் தொடங்கி வைத்தாா்.
வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட காவிரி கரையில் உள்ள மின் மயானத்தில் விறகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கு ரூ. 12 லட்சத்தில் மேற்கூரை, வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கொளக்காட்டுப்புதூா் பகுதியில் ரூ. 10.25 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.
விழாவில், மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நெடுஞ்செழியன், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, முன்னாள் பொத்தனூா் பேரூராட்சித் தலைவா் நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம், வெங்கரை பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா், துணைத் தலைவா் ரவிந்தா், வேலூா் நகரச் செயலாளா் வேலுச்சாமி, முன்னாள் அரசு வழக்குரைஞா்கள் தனசேகரன், லோகநாதன், அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.