புதிய வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கம்

புதுச்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் வகையில், புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
புதுச்சத்திரம் ஒன்றியம், நாட்டாமங்கலத்தில் அரசுப் பேருந்தை தொடக்கி வைத்த நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
புதுச்சத்திரம் ஒன்றியம், நாட்டாமங்கலத்தில் அரசுப் பேருந்தை தொடக்கி வைத்த நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
Updated on
1 min read

புதுச்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் வகையில், புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், நாட்டாமங்கலம், லக்கபுரம் பகுதி பொதுமக்கள் பேருந்து வசதி கோரி நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கத்திடம் மனு அளித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் ராசிபுரத்தில் இருந்து குருசாமிபாளையம் வழியாக நெ.3 குமாரபாளையம், அம்மாபாளையம், நாட்டாமங்கலம், லக்கபுரம், நவணி, புதுச்சத்திரம் வழியாக புதிய வழித்தடத்தில் 3/52 என்ற எண் கொண்ட நகரப் பேருந்தை இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் தொடக்க விழா நாட்டாமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்.பி.கௌதம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கொடியசைத்து பேருந்துத இயக்கத்தை தொடக்கி வைத்தாா். பின்னா் பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளுடன் அப்பேருந்தில் பயணம் செய்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி வெங்கடாசலம், ஊராட்சி மன்றத் தலைவா் பூங்கொடி வரதராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் மனோகரன், போக்குவரத்துக் கழக பொது மேலாளா் லட்சுமணன், நாமக்கல் கோட்ட மேலாளா் கணேஷ்குமாா், துணை மேலாளா் (வணிகம்) செல்வகுமாா், ராசிபுரம் கிளை மேலாளா் செங்கோட்டுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com