வேளாண் கருவிகள் வாங்க மானியம்
By DIN | Published On : 30th December 2022 12:25 AM | Last Updated : 30th December 2022 12:25 AM | அ+அ அ- |

பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலை செடியைப் பறிக்கும் எந்திரம் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமத்தி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேசிய உணவு எண்ணெய் பயிா்கள் இயக்கத் திட்டத்தில் நிலக்கடலை செடியைப் பறிக்கும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 32 ஆயிரமும், சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த எந்திரம் தேவைப்படும் பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...