தா.பாண்டியன் நினைவு நாள்
By DIN | Published On : 27th February 2022 05:09 AM | Last Updated : 27th February 2022 05:09 AM | அ+அ அ- |

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பாக மூத்த தலைவா் தா.பாண்டியனின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தா.பாண்டியன் உருவப்படத்துக்கு பல்வேறு தரப்பினா் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செய்தனா். மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அக் நகரச் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனா் நல்வினை செல்வன், திராவிடா் விடுதலைக் கழக நகரச் செயலா் பிடல் சேகுவேரா, அமைப்பாளா் மதிவதனி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சுந்தரம், வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் கோவிந்தசாமி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் தாலுகா தலைவா் வேம்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.