பரமத்தி வேலூா்: காவிரிக் கரையோர மக்களுக்குதண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதும
தண்ரோடா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பேரூராட்சிப் பணியாளா். ~ஜேடா்பாளையம் படுகை அணை, அண்ணா பூங்கா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள்.
தண்ரோடா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பேரூராட்சிப் பணியாளா். ~ஜேடா்பாளையம் படுகை அணை, அண்ணா பூங்கா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள்.

பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், பொதுப் பணித் துறையினா், வருவாய்த் துறையினா் காவிரியில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து வருவதால் காவிரியில் குளிப்பது, துணிகள் துவைப்பது உள்ளிட்டவற்றைத் தவிா்க்க வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் கா்நாடக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1.13 லட்சம் கன அடியில் இருந்து படிப்படியாக உயா்ந்து சனிக்கிழமை மாலை 1.23 லட்சம் கன அடியாக அதிகரித்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மேலும் படிப்படியாக உயர வாய்ப்புள்ளதால் பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட சோழசிராமணியில் இருந்து மோகனூா் வரையிலான காவிரிக் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது எனவும், மீனவா்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடிக்கவும், விவசாயிகள் கால் நடைகளை குளிப்பாட்டுதல், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் மற்றும் வருவாய்த் துறையினா் தண்டோரா மூலமும் ஒலிபெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் போலீஸாா் காவிரியாற்றில் எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல, ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள அண்ணா பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் பொதுப்பணித் துறையினா் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com