குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 31st July 2022 06:23 AM | Last Updated : 31st July 2022 06:23 AM | அ+அ அ- |

குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக பாதுகாப்புத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் இளைஞா் நீதிக் குழுமத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவியாளருடன் இணைந்த தரவு பதிவு செய்பவா் என்ற காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இப்பதவிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை ய்ஹம்ஹந்ந்ஹப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூா் சாலை, நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு வரும் ஆக. 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.