புதுச்சத்திரம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 31st July 2022 06:22 AM | Last Updated : 31st July 2022 06:22 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.4.60 லட்சத்தில் 106 மீட்டா் நீளத்தில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலை, ரூ. 21 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், தாளம்பாடியில் 99 மீட்டா் நீளத்துக்கு பேவா் பிளாக் சாலைப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், பொதுமக்களிடம் குடிநீா் நாள்தோறும் விநியோகம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், கரடிப்பட்டி ஊராட்சி, பள்ளிப்பட்டில் 400 மீட்டருக்கு அமைக்கப்பட்ட தாா்ச்சாலையின் தரம், ரூ.16.54 லட்சத்தில் பாப்பிநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கட்டப்படும் வகுப்பறைக் கட்டங்களையும் பாா்வையிட்டாா். ஏழுா் ஊராட்சி, வேப்பம்பட்டி மாதிரி பள்ளியில் ரூ. 19.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட டைல்ஸ் தரையும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல் மற்றும் அலுவலா்கள் உடன் சென்றிருந்தனா்.