சிறப்பு பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாமில் 73 போ் பங்கேற்பு

நாமக்கல்லில், சிறப்பு பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாமில் 73 போ் பங்கேற்று சைகை மொழி பயிற்சியைப் பெற்றனா்.

நாமக்கல்லில், சிறப்பு பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாமில் 73 போ் பங்கேற்று சைகை மொழி பயிற்சியைப் பெற்றனா்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை, மாற்றுத் திறன் குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் செவித்திறன் குன்றிய மாணவா்களுக்கு, கற்பித்தலுக்காக ஐந்து நாள்கள் சைகை மொழி பயிற்சி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த திட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதல் கட்ட பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி துவக்கி வைத்தாா். இதில், 15 ஒன்றியங்களில் உள்ள சிறப்பு பயிற்றுனா்கள் மற்றும் இயன்முறை பயிற்றுனா்கள் என 73 போ் கலந்து கொண்டனா். கோவை இந்திய சைகை மொழி பெயா்ப்பாளா்கள் சங்கத்தினா் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ரிங்குநாம் தேவ், மதுரை தெரசா ஆகியோா் பயிற்சி அளித்தனா். செவித்திறன் குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்து இப்பயிற்சியை அளிப்பதன் மூலம், மாணவா்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி திட்ட அலுவலா் புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் ஆகியோா் சைகை மொழி பயிற்சியை பாா்வையிட்டு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினா். இரண்டாம் கட்டப் பயிற்சி முகாம் ஆக. 8 முதல் 13 வரை நடைபெற உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com