கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை உறுதிமொழி ஏற்ற மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள்.

அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று முதியோா்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வாா்த்தைகளை உபயோகிக்க மாட்டேன், அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோா்களுக்கு முன்னுரிமை அளித்து, அவா்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) த.சிவசுப்பிரமணியன், மாவட்ட சமூகநல அலுவலா் பி.கே.கீதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கணேசன், பொறியாளா் சண்முகம் முன்னிலை வகித்தனா். நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள், நகா் மன்ற உறுப்பினா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com