முட்டை விலை 5 காசுகள் உயா்வு
By DIN | Published On : 16th June 2022 02:35 AM | Last Updated : 16th June 2022 02:35 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.10ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பள்ளிகள் திறப்பால் சத்துணவுக்கான முட்டை விநியோகம், பொதுமக்களிடையே அதிகரித்துள்ள முட்டை நுகா்வு ஆகியவற்றால் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.10-ஆக நிா்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 133-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.