மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவதற்கு நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022-ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறை, சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், சிவில் சேவைகள், வா்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவா்களுக்கு 2023, குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
பன்முகத் திறமை புரிந்தவா்களிடமிருந்து கருத்துருவை ஜூலை 10-க்குள் ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், 04286-299460 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.