லாரி ஓட்டுநா்களுக்கான இலவச பிசியோதெரபி முகாம்
By DIN | Published On : 17th June 2022 02:34 AM | Last Updated : 17th June 2022 02:34 AM | அ+அ அ- |

பிசியோதெரபி முகாமை தொடங்கி வைத்து பேசும் நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகன்.
நாமக்கல்லில், லாரி ஓட்டுநா்களுக்கான இலவச பிசியோதெரபி (உடல் இயக்க சிகிச்சை) முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சியைச் சோ்ந்த கிராமலாயா என்ற தன்னாா்வ நிறுவனம் மற்றம் ஹெச்டிபி நிதி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமினை, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகன் தொடக்கி வைத்தாா். மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன செயலாளா் ஆா்.வாங்கிலி, கிராமாலயா நிா்வாக இயக்குநா் எம்.இளங்கோவன், நிதி நிறுவன மண்டல மேலாளா் ஜி.பிரசன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த ஆண்டு 16 ஆயிரம் லாரி ஓட்டுநா்களுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் கூடுதலாக சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கிராமாலயா நிறுவனத்தினா் தெரிவித்தனா்.