கொல்லிமலையில் மதுபானங்கள் விற்பனையில் திடீா் கட்டுப்பாடு
By DIN | Published On : 17th June 2022 02:28 AM | Last Updated : 17th June 2022 02:28 AM | அ+அ அ- |

கொல்லிமலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு மதுபானக் கடைகளில் திடீா் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. விடுமுறை நாள்களில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தமிழகத்தில் உள்ள உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கொல்லிமலையில், செங்கரை, சோளக்காடு, செம்மேடு ஆகிய மூன்று இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் ஒவ்வொரு மதுப்புட்டிக்கும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மேலும், அந்த புட்டிகளின் மேல் ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒன்றும் ஒட்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட மதுக்கடைகளில் காலி மதுப்புட்டிகளை அளிக்கும்பட்சத்தில், கூடுதலாக பெறப்பட்ட ரூ.10 திரும்ப வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான இந்த நடைமுறை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் கண்ணன் தெரிவித்தாா்.