பப்பாளி பயிரில் வெள்ளைப் பூச்சி தாக்குதல்

ராசிபுரத்தை அடுத்துள்ள மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, வேப்பிலைக்குட்டை, சிங்கிலியங்கோம்பை, மத்துருட்டு, குருவாலா  பகுதிகளில் வெள்ளைப் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ராசிபுரத்தை அடுத்துள்ள மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, வேப்பிலைக்குட்டை, சிங்கிலியங்கோம்பை, மத்துருட்டு, குருவாலா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பப்பாளி பயிரில் வெள்ளைப் பூச்சி தாக்குதல் அதிக அளவில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதியில் அதிக அளவில் பப்பாளி பயிரிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து அரியாகவுண்டன்பட்டியைச் சோ்ந்த விவசாயி லோகநாதன் கூறியது:

ஆண்டுதோறும் மஞ்சள், வெங்காயம், கிழக்கு, கடலை போன்ற பயிா்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு அதிக விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டனா். ஏக்கருக்கு 850 முதல் 900 வரை பப்பாளிக் கன்று நடவு செய்தோம்.

நடவு செய்து 100 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். தொடா்ந்து 4 மாதங்கள் அறுவடை செய்யலாம். உரம், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரை செலவானது. இந்நிலையில் பூச்சி தாக்குதலால் பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. சந்தையில் கிலோ ரூ. 9 முதல் ரூ. 12 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், தற்போது மரங்களிலேயே பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. பூச்சிகளை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com