நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தோா் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு 2022-ஆம் ஆண்டிற்கான தைரியமாக, சமுதாய தொண்டாற்றி சாதனை புரிந்த பெண் ஒருவருக்கு சுதந்திரத் தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டவா் தமிழகத்தைச் சாா்ந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைத்தல் வேண்டும்), வீர, தீர மற்றும் சாகசச் செயல்கள் புரிந்த தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சாதனை புரிந்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பம் மற்றும் ஆவணம் அடங்கிய விரிவான தொகுப்புகளை ஜூன் 24 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.