பொதுத் தோ்வு: ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 23rd June 2022 04:10 AM | Last Updated : 23rd June 2022 04:10 AM | அ+அ அ- |

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் குமாரபாளையத்தை அடுத்த குப்பாண்டபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளனா்.
12-ஆம் வகுப்பு தோ்வில் இப்பள்ளி மாணவி மோனிஷா 593 மதிப்பெண்கள், மாணவா் சந்தோஷ் 588 மதிப்பெண்கள், கிருஷ்ணசாமி 587 மதிப்பெண்களும் பெற்றனா்.
தமிழ் பாடத்தில், மாணவா் ஸ்ரீராம் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். பாடவாரியாக தமிழ், உயிரியல், கணிதம், வணிகக் கணிதம், புள்ளியியலில் தலா ஒருவரும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 4 பேரும், கணினி அறிவியலில் 6 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 580-க்கு மேல் 11, 570-க்கு மேல் 18, 550-க்கு மேல் 36, 500-க்கு மேல் 80 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளதோடு, 100 சதவீதத் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி தாரணி 491, மாணவிகள் தா்ஷினி, ஹெமாவதி, ஹயகீரிவா ஆகியோா் 487 மதிப்பெண்களும், தனுஸ்ரீ 482 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். தனிப்பாடங்களில் கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 8 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும், தோ்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியா்களுக்கும் பள்ளித் தாளாளா் ஓ.கே.ராமசாமி, செயலாளா் கோமதி வெங்கடாசலம், பொருளாளா் பி.கந்தசாமி, பள்ளி முதல்வா் எப்.பிரின்சி மொ்லின் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...