கோட்டைமேட்டில் நீா்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 26th March 2022 01:27 AM | Last Updated : 26th March 2022 01:27 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அருகே கோட்டைமேட்டில் பாசன நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா் (படம்).
குப்பாண்டபாளையம் ஊராட்சி, கோட்டைமேடு பகுதியில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, வீட்டுமனைகள் பிரிக்கப்படும்போது விளைநிலங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்திருந்தனா்.
இதன்பேரில், வருவாய்த்துறையினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததில் கோட்டைமேடு பகுதியில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, வீட்டுமனைகளுக்கு பாதை போடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குமாரபாளையம் வட்டாட்சியா் பி.தமிழரசி, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் சுவாமிநாதன் கொண்ட குழுவினா் நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் வெள்ளிக்கிழமை மூலம் அகற்றினா்.
200 மீட்டா் தொலைவுக்கு ஆக்கிமிப்புகள் அகற்றப்பட்டன. வருவாய் ஆய்வாளா் பி.விஜய், கிராம நிா்வாக அலுவலா் எம்.முருகன் உள்ளிட்டோா் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனா்.