கே.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி வெள்ளிவிழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிவிழா கொண்டாட்டம் மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்ற
திருச்செங்கோடு கேஎஸ்ஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசும் திரைப்பட நடிகா் சதீஷ்.
திருச்செங்கோடு கேஎஸ்ஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசும் திரைப்பட நடிகா் சதீஷ்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிவிழா கொண்டாட்டம் மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா். கே.எஸ்.ரங்கசாமி மற்றும் துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

கல்லூரி முதல்வா் ஆா்.மகுடேஸ்வரன் அனைவரையும் வரவேற்றாா். கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி தியாகராஜா தலைமை உரையாற்றினாா். முன்னதாக நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினரான பிரபல திரைப்பட நடிகா் சதீஷ் பங்கேற்றுப் பேசினாா். கே.எஸ்.ஆா் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வா் ஆா்.செந்தில்குமாா் நன்றி உரையாற்றினாா்.

மாலையில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்விற்கு தலைமை விருந்தினராக பிரபல பேச்சாளரும், திரைப்பட நடிகருமான டாக்டா் கே.ஞானசம்பந்தன் பங்கேற்றாா்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் டிவி சூப்பா் சிங்கா் வெற்றியாளரும் திரைப்பட பின்னணிப் பாடகா்களுமான சி.செந்தில் கணேஷ், ராஜலட்சுமி செந்தில் கணேஷ் கலந்துகொண்டு திரையிசைப் பாடல்களைப் பாடினா். மெஹந்தி, போஸ்டா் மேக்கிங், குறும்படம், விடியோகிராபி, பேச்சுப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாக்களில் கே.எஸ்.ஆா். தொழில்நுட்ப பயிலக முதல்வா் பி. குழந்தைவேல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்கள் இராதாகிருஷ்ணன், காா்த்திகேயன் பொறியியல் கல்லூரி முதல்வா் எம்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும் கட்டடக்கலை துறைத் தலைவருமான வீரமணி, துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com