ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருட்டு: 15 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.

புதுச்சத்திரம் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே லட்சுமி விலாஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில், கடந்த புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சத்தை திருடிச் சென்றனா். மேலும் போலீஸாா் தங்களைப் பிடிக்காத வகையில் மிளகாய்ப் பொடியை ஏடிஎம் இயந்திரத்தின் உள் பகுதியில் தூவிவிட்டுச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள 15 தனிப்படை போலீஸாா், பெங்களூரு, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com