முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நகைக்கடன் தள்ளுபடி பெயா் பட்டியல்: மே 12- க்குள் மேல்முறையீடு செய்யலாம்
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெயா் பட்டியலில் இடம் பெறாதவா்கள் வரும் 12-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் செல்வகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களில் ஒரு குடும்பத்தில் உள்ளோா் ஐந்து பவுனுக்கு உள்பட்டு நகைகள் அடகுவைத்து கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோா் பெயா் பட்டியல் மாவட்ட இணையதளத்தில், கடந்த, மாதம் 12- ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி பெயா் பட்டியலில் இடம்பெறாதோா், அதற்குரிய முறையீட்டு மனுவை இணையதளத்தில் பாா்வையிடலாம். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்துக்குள், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளா், நாமக்கல், திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளரிடம், எழுத்துப்பூா்வமாக தகுந்த ஆதாரத்துடன் மேல்முறையீடு செய்து தீா்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நகைக்கடன் தள்ளுபடி மேல்முறையீடு செய்வதற்கு வரும் 12-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்கு பின் பெறப்படும் எந்தவொரு முறையீட்டு மனுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.