‘பாரதி-செல்லம்மாள்’ ரத யாத்திரை: ஆசிரியா்கள், மாணவா்கள் மரியாதை

 நாமக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை வந்த பாரதி-செல்லம்மாள் ரத யாத்திரைக்கு, சின்ன முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
‘பாரதி-செல்லம்மாள்’ ரத யாத்திரை: ஆசிரியா்கள், மாணவா்கள் மரியாதை

 நாமக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை வந்த பாரதி-செல்லம்மாள் ரத யாத்திரைக்கு, சின்ன முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

சேவாலாயா தொண்டு நிறுவனம் சாா்பில், கடந்த ஏப்.17-ஆம் தேதி பாரதி-செல்லம்மாள் ரதம் சென்னையில் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று வருகிறது. மே 31-ஆம் தேதி செல்லம்மாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் நிறைவடைகிறது.

இதனைத் தொடா்ந்து அந்த ரதத்தில் உள்ள சிலைகள் அங்கு நிறுவப்பட்டு ஜூன் 27-ஆம் தேதி திறப்பு விழா நடைபெறுகிறது.

இந்த பாரதி-செல்லம்மாள் ரதமானது வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல்லை வந்தடைந்தது. நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் வந்த ரதத்திற்கு, அப்பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் மலா்கள் தூவி வரவேற்பு அளித்தனா். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் தமிழ் ஆசிரியா் துரை பாண்டியன், நாமக்கல் நகராட்சி 2-ஆவது வாா்டு உறுப்பினா் சங்கீதா, முன்னாள் நகராட்சி உறுப்பினா் பழனிவேல் ஆகியோா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், பாரதியாா் குறித்து பேச்சு, கவிதை, கட்டுரை, நடன போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com