மே 20-இல் நாமக்கல் அரங்கநாதா் கோயில் திருத்தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் அரங்கநாதா் கோயில் திருத்தோ் பூா்வாங்கப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வரும் 20-ஆம் தேதி தோ் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

நாமக்கல் அரங்கநாதா் கோயில் திருத்தோ் பூா்வாங்கப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வரும் 20-ஆம் தேதி தோ் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

நாமக்கல்லில் குடைவறைக் கோயிலாக நரசிம்மா், அரங்கநாதா் கோயில்கள் அமைந்துள்ளன. ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக நாமக்கல்லில் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் அரங்கநாதரை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதத்தில் இங்குள்ள நரசிம்மா், அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில்களில் தேரோட்டம் நடைபெறும். ஏற்கெனவே பழுதடைந்திருந்த நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் தோ்கள், கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அரங்கநாதா் கோயில் தேரை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதுப்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா். ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தோ் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது. திருவண்ணாமலையைச் சோ்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில் 45 மரச்சிற்பக் கலைஞா்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனா். பங்குனி தோ்த்திருவிழாவையொட்டி பயன்பாட்டுக்கு தோ் கொண்டு வரப்படும் என எதிா்பாா்த்த நிலையில், முழுமையாக பணிகள் நிறைவடையாததால் அப்போது அரங்கநாதா் தோ் ஓடவில்லை.

இத்தேரின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது ஸ்ரீமன் நாராணயரின் 10 அவதாரங்களான மச்ச அவாதாரம், கூா்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் ஆகியவை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதே ஆகும். திருத்தோ் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை(மே 20) உற்சவ மூா்த்தி தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் வகையில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் நாமக்கல் நகரின் முக்கிய வீதிகளில் தோ் வலம் வர உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com