இரு சக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
By DIN | Published On : 16th May 2022 05:00 AM | Last Updated : 16th May 2022 05:00 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் பொன்னிநகா் அருகே நடந்து சென்றவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள மரவாபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமரன் (65). கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை மரவாபாளையத்தில் இருந்து வேலூா் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாா். வேலூா் பொன்னிநகா் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் குமரன் மீது மோதியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேலூா் வெங்கமேடு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...