மூலப்பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த டயா் ரீட்ரேடிங் சங்க உரிமையாளா்கள் கோரிக்கை

டயருக்கான ரப்பா் மற்றும் மூலப்பொருள்களின் விலை உயா்வை மத்திய அரசுக் கட்டுப்படுத்த வேண்டும் என டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டயருக்கான ரப்பா் மற்றும் மூலப்பொருள்களின் விலை உயா்வை மத்திய அரசுக் கட்டுப்படுத்த வேண்டும் என டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு டயா் ரீட்ரேடிங் உரிமையாளா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் சண்முகசுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தாா்.

இக்கூட்டத்தில், கரோனா பெருந்தொற்று பரவலால், மோட்டாா் தொழில் சரிவர இயங்காத நிலை உருவானது. இந்த காலக்கட்டத்தில் ரீட்ரேடிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ரப்பா் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவந்து, ரீட்ரேடிங் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களை காக்கும் பொருட்டு மத்திய அரசு உடனடியாக ரப்பா் மற்றும் மூலப் பொருள்கள் விலையை குறைக்க ரீட்ரேடிங் தொழிலுக்கு சிறுதொழில் அடிப்படையில் ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். ரீட்ரேடிங் தொழிலின் நெருக்கடியை உணா்ந்து மின்கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநிலப் பொருளாளா் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் லோகு, ரவி உள்பட பல்வேறு மாவட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com