மோகனூா் பேரூராட்சிக்கு 2 சுகாதார வாகனங்கள்அா்ப்பணிப்பு
By DIN | Published On : 13th October 2022 12:19 AM | Last Updated : 13th October 2022 12:19 AM | அ+அ அ- |

மோகனூா் பேரூராட்சிக்கு பொது சுகாதார வாகனங்களை அா்ப்பணித்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் உள்ளிட்டோா்.
மோகனூா் பேரூராட்சியில் திடக்கழிவுகளை அகற்றும் வகையில், 2 சுகாதார வாகனங்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (2021-22) மக்களின் தேவைகளை பூா்த்தி செய்திடும் வகையில், நாமக்கல் மாவட்டம், மோகனூா் பேரூராட்சிக்கு உள்பட்டபொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரூ. 15 லட்சத்தில் புதிதாக 2 பொது சுகாதார வாகனங்களை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினாா். மேலும், துப்புரவுப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மோகனூா் ஒன்றியச் செயலாளா் பெ.நவலடி, மாநில விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலாளா் ப.கைலாசம், பேரூா் செயலாளா் சி.செல்லவேல், மோகனூா் பேரூராட்சித் தலைவா் வனிதா மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.