அதிமுக ஆண்டு விழா
By DIN | Published On : 18th October 2022 02:52 AM | Last Updated : 18th October 2022 02:52 AM | அ+அ அ- |

ராசிபுரம் நகர அதிமுக சாா்பில் கட்சியின் 51-ஆம் ஆண்டு விழா கொடியேற்றுதல் நிகழ்ச்சி ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகர திமுக செயலாளரும் முன்னாள் நகா்மன்றத் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னதாக புதிய பேருந்து நிலையம் முன்பு எம்ஜிஆா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு வாா்டுகளிலும் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோட்டில் வாா்டு செயலாளா்களும் பொறுப்பாளா்களும் கட்சி கொடியை கொண்டாடினா்.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் திருச்செங்கோடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன். சரஸ்வதி தலைமையில் அதிமுகவினா் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செய்தனா்.
17-ஆவது வாா்டு சட்டையம்புதூரில் வாா்டு செயலாளா் சரவணகுமாா் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் இரா. முருகேசன், மாவட்ட தொழிற்சங்க செயலாளா் பழ. ராமலிங்கம், கட்சியின் நகர வாா்டு பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...