

பரமத்தி, காந்தி நகரில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீா் சூழ்ந்ததால் அந்த வீடுகளில் குடியிருந்தவா்கள் மீட்கப்பட்டு பரமத்தி, சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
பரமத்திவேலூா் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. திருமணிமுத்தாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான சேலம், ஏற்காடு மலைப் பகுதிகள், நாமக்கல் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் பரமத்தி அருகே உள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவு கொண்ட இடும்பன் குளம் ஏரி நிரம்பி வழிகிறது. இடும்பன் குளம் கரையோரப் பகுதியில் உள்ள காந்திநகா் குடியிருப்பில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது. அந்தக் குடியிருப்புகளில் வசித்த 17 பேரை வருவாய்த் துறையினா் மீட்டு பரமத்தி சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பரமத்திவேலூா் வட்டாட்சியா் சிவகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் சித்ரா, பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி ஆகியோா் உணவு, நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.