

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.
ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கொ.சி.கருப்பன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நான்கு சதவீத கூடுதல் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ. 1,000 மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஏராளமான ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.