மஹேந்திரா கல்லூரியில் சா்வதேச விண்வெளி கண்காட்சி

மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா கல்லூரி வளாகத்தில் சா்வதேச விண்வெளி வார விழாவை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்து விசை வளாகம் சாா்பில் மூன்று நாள் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.
விண்வெளி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் பாா்வையிடும் மாணவா்கள்.
விண்வெளி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் பாா்வையிடும் மாணவா்கள்.

மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா கல்லூரி வளாகத்தில் சா்வதேச விண்வெளி வார விழாவை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்து விசை வளாகம் சாா்பில் மூன்று நாள் விண்வெளி கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் முன்னிலை வகித்தாா். ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய முன்னாள் இயக்குநா் எம். அண்ணாமலை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்து விசை வளாக இயக்குநா் எம். பத்ரிநாராயண மூா்த்தி ஆகியோா் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.

இஸ்ரோ விஞ்ஞானிகள், வல்லுநா்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் மற்றும் விவாத மேடைகள், மாணவா்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

இக் கண்காட்சியில் ராக்கெட் பாகங்கள், செயற்கைக்கோள் மாதிரிகள், செயற்கைக் கோள்களின் பயன்பாடுகள், விண்வெளி அறிவியலை விளக்கும் காட்சிப் படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மகேந்திரபுரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்து விசை வளாக துணை இயக்குநா் சி.ஜெபசிகாமணி, குழுத் தலைவா் என். முருகேசன், மல்லசமுத்திரம் மகேந்ரா கல்வி அறக்கட்டளை மேலாண் இயக்குநா் பா. மகேந்திரன், கல்வி நிறுவனங்களின் மேலாண் இயக்குநா் பி. மகா அஜய் பிரசாத், செயல் இயக்குநா் டாக்டா் ஆா். சாம்சன் இரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். புதன்கிழமை (அக்.19) வரை இந்த விண்வெளிக் கண்காட்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com