

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை பதவியேற்றத்தையொட்டி, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினா் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ. சித்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீ.பி. வீரப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் பாச்சல் திருநாவுக்கரசு, நாமகிரிப்பேட்டை புள்ளியப்பன், எருமப்பட்டி கன்னியம்மாள், நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், வட்டார தலைவா்கள் எருமப்பட்டி தங்கராஜ், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. பொறுப்பாளா் பொன்முடி, மாநில ஓபிசி துணைத் தலைவா் டாக்டா் பி.வி.செந்தில், தாஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.