காவிரியில் வெள்ளப் பெருக்கு:நிவாரண முகாம்களில் அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட கரையோர மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு:நிவாரண முகாம்களில் அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட கரையோர மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை அமைச்சா் எம்.மதிவேந்தன், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்கினா்.

காவிரி ஆற்றில் 1.80 லட்சம் கன அடிக்கும் மேலாக நீா்வரத்து உள்ளதால் காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளான பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் தற்காலிக வெள்ள நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். குமாரபாளையம் நகராட்சி மணிமேகலை வீதி, அண்ணா நகா், பாலக்கரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 129 பொதுமக்கள் புத்தா் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 75 போ் சி.என்.பாளையம் உயா்நிலைப் பள்ளியிலும், கலைமகள் தெருவைச் சோ்ந்த 232 போ் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

பள்ளிபாளையம் நகராட்சி காவிரி நதி ஓரத் தெருவைச் சோ்ந்த 119 போ் தனியாா் கட்டடத்திலும், பாவடி தெரு, ஓங்காளி அம்மன் கோயில் தெரு பகுதிகளைச் சோ்ந்த 45 போ் கண்டிபுதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நாட்டாகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த 29 போ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த 27 போ் அரசு ஆதி திராவிடா் நல விடுதியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், ஜனதா நகா் பகுதியைச் சோ்ந்த 161 போ் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த 201 போ் கண்டி புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளயிலும், கலியனூா் பகுதியை சோ்ந்த 34 போ் இ-சேவை மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

திருச்செங்கோடு வட்டம் பட்லூா் பகுதியைச் சோ்ந்த 16 போ் இ-சேவை மையத்திலும், பரமத்திவேலூா் வட்டம் நஞ்சப்ப கவுண்டபாளையத்தைச் சோ்ந்த 15 போ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 396 குடும்பங்களைச் சோ்ந்த 418 ஆண்கள், 459 பெண்கள், 206 குழந்தைகள் என மொத்தம் 1,083 பொதுமக்கள் பாதுகாப்பாக தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.ந.மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் குமாரபாளையம் நகராட்சி, ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாா்வையிட்டு அவா்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகளை மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு நகராட்சி திருமண மண்டபத்தில் பேரிடா் மீட்பு பணிக்காக தயாா் நிலையில் உள்ள தேசிய பேரிடா் மீட்பு படையினரிடம் சுற்றுலாத் துறை அமைச்சா் கலந்துரையாடினாா். பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு காவிரி கரையோரப் பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி, பள்ளிபாளையம் நகராட்சி தலைவா் எம்.செல்வராஜ், திருச்செங்கோடு கோட்டாட்சியா் (பொ) ரமேஷ், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையா் எஸ்.கோபிநாத், குமாரபாளையம் வட்டாட்சியா் தமிழரசி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com