பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
By DIN | Published On : 01st September 2022 01:53 AM | Last Updated : 01st September 2022 01:53 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் செங்குந்தா் மகாஜன அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 2021-22-ம் கல்வியாண்டு மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று183 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.
விழாவில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.கே.பாலசந்திரன், பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.