செப். 14-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 09th September 2022 01:28 AM | Last Updated : 09th September 2022 01:28 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், முன்னாள் படைவீரா்களின் விதவையா்கள், படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள், அவரைச் சாா்ந்தோா்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா் தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் ஆட்சியரிடம் நேரில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.