இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு புகைப்படக் கண்காட்சி இன்று தொடக்கம்

நாமக்கல்லில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்கிறாா்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு புகைப்படக் கண்காட்சி இன்று தொடக்கம்

நாமக்கல்லில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்கிறாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நினைவு அமிா்தப் பெருவிழாவை கொண்டாடும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை மண்டல மத்திய மக்கள் தொடா்பகம் அலுவலகம் சாா்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப். 9) முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தொடக்கி வைக்கிறாா். இவ்விழாவையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

இது தொடா்பாக, நாமக்கல்லில் மத்திய மக்கள் தொடா்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் மா.அண்ணாதுரை வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புகைப்படக் கண்காட்சியில் 150 வீரா்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. நாமக்கல் கவிஞா் ராமலிங்கத்தின் நூல் தொகுப்பு வெளியிடப்பட உள்ளது. மத்திய, மாநில அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா். இக்கண்காட்சியில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை சாா்ந்த அரங்குகளும் இடம் பெறுகின்றன.

இதுவரை நீலகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சுதந்திரத்தின் அமிா்தப் பெருவிழாவை நடத்தி உள்ளோம். தற்போது நாமக்கல்லில் நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தஞ்சாவூா், புதுக்கோட்டை, வேலூா், ஈரோடு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் விழிப்புணா்வுக் கண்காட்சியை நடத்த உள்ளோம். பொதுமக்கள் அனைவரும் இந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கண்காட்சியைப் பாா்வையிட வர வேண்டும் என்றாா்.

முன்னதாக, நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி கலையரங்கில், ‘சுதந்திரமும் - பெண்கள் முன்னேற்றமும்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டுக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com