அமைப்புசாரா ஓட்டுநா்கள் பாதுகாப்பு பெட்டகம் பெற்றுக் கொள்ள அழைப்பு
By DIN | Published On : 09th September 2022 01:30 AM | Last Updated : 09th September 2022 01:30 AM | அ+அ அ- |

தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா ஓட்டுநா்கள் பாதுகாப்பு பெட்டகம் பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பெட்டகங்கள் (சீருடை, காலணி மற்றும் முதலுதவிப் பெட்டி) நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாதுகாப்பு பெட்டகம் பெற்றவா்களுக்கும், 60 வயது பூா்த்தியடைந்த ஓய்வூதியதாரா்களுக்கும் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட மாட்டாது. அசல் நலவாரிய அட்டை மற்றும் நகலுடன் மேற்படி அலுவலகத்தில் நேரில் வந்து பாதுகாப்பு பெட்டகங்களை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.